top of page
சுதர்சன் சக்ரா ஆர்ட் கிராப்ட்ஸ்
உயர்தரமான மாத காலண்டர் தயாரிப்பாளர்கள்
காலண்டரில் உள்ள முக்கியக் குறிப்புகள்
சந்திராஷ்டமம் ஒரு முக்கிய விளக்கம்
சந்திராஷ்டம தினம் என்பது ஜோதிட வானியல் கலையின்படி நம் மனத்தை கட்டுப்படுத்தி அறிவுத்திறனை நிர்ணயிக்கும் கிரகமாக சந்திரன் நம் ராசியில் அஷ்டமமாக (குறைவாக) இருப்பது ஆகும். சந்திராஷ்டம தினத்திற்கு முந்திய நாளும், பிந்திய நாளும் சேர்த்து ஆக மொத்தம் மூன்று நாட்களும் கவனமாக பேச வேண்டும். சந்திராஷ்டம தினங்களில் சம்மந்தப்பட்ட ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடாது. சந்திராஷ்டம தினங்களில் சம்மந்தப்பட்ட ராசிக்காரர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யக் கூடாது. எப்படி ராசிபலன் முக்கியமாக கருதி பார்க்கிறோமோ அதைவிட 10 மடங்கு முக்கியமாக கருதி சந்திராஷ்டமத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த காலண்டரில் சந்திராஷ்டமம் அவர்களுடைய நட்சத்திரபடி கொடுக்கப்பட்டுள்ளது.
சர்வ சுதர்சன நல்ல நேரம் விளக்கம்
சர்வ சுதர்சன நல்ல நேரம் என்றால் பின்வருமாறு விளக்கம் தருகிறோம். பொதுவாக நமது வீட்டில் அல்லது நமது தொழில் செய்யும் இடத்தில் சுபகாரியங்கள் செய்யும் போதும், பிரயாணம் தொடங்கும் போதும், மற்ற எந்த சுபகாரியங்கள் செய்யும் போதும் ராகு காலம், எமகண்டம் இருக்கக் கூடாது. மற்றும் சுப ஓரைகளில் செய்யும் எந்த காரியம் ஆனாலும் நமக்கு வெற்றி தான். எனவே சுப ஓரைகளில் தான் சுபகாரியங்கள் செய்வோம். அடுத்து கௌரி நல்ல நேரம் அதாவது லாபம், அமிர்தம், தனம், உத்தமம் இருந்தால் நல்லது. எனவே, நாம் கொடுத்துள்ள சர்வ சுதர்சன நல்ல நேரம் என்பது பிரபல பஞ்சாங்க நிபுணர்களை வைத்து ஆராய்ந்து, சுப ஓரைகளோடும், கௌரி நல்ல நேரமாகவும், ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரமாக இருக்கும். இதை பார்ப்பது மிகவும் எளிது. இறுதியாக சர்வ சுதர்சன நல்ல நேரத்தில் செய்யும் அனைத்து காரியங்களும் ஜெயம் தான்.
2025
2025
BEST SELLERS
Sudarson Chakra calendars online store bulk supplies of High quality office tamil English monthly printed calendars pan India. Variety of designs to choose with especially daily tamil panchangam calendars for details and timings. Multiple collections to choose with. High quality printed office tamil monthly calendars online shop
bottom of page